உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடற்கரையில் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி

கடற்கரையில் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடற்கரையில், மஹோதய தீர்த்தவாரிக்காக, ஸ்தலசயன பெருமாள், கடலில் புனித நீராடினார்.இந்து மத, வைணவ வழிபாட்டில், மஹோதய உற்சவம் குறிப்பிடத்தக்கது. தை மாத, அமாவாசை, திங்களன்று, திருவோண நட்சத்திர நாளாக அமைவது, மஹோதய நாள்.இந்நாளில், புனித நீர் நிலைகளில் நீராடி, நம் முன்னோர்க்கு, தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி பெறுவது, ஹிந்துக்களுக்கு வழக்கம். இந்நாளான நேற்று, புனித நீர்நிலையாக விளங்கும், மாமல்ல புரம் கடற்பகுதியில், சுவாமி புனித நீராடினார்.ஸ்தலசயன பெருமாள் கோவிலில், காலை வழிபாட்டைத் தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள், பூதத்தாழ்வார், வாகன மண்டபத்தில் எழுந்தருளினர்.தொல்லியல் வளாக, ஆதிவராக பெருமாளும், அங்கு எழுந்தருளி, கருட வாகனங்களில் சேவையாற்றினர். அதைத்தொடர்ந்து, கோவிலிலிருந்து, காலை, 7:15 மணிக்கு புறப்பட்டனர்.பூதத்தாழ்வாரை நோக்கிய தரிசனத்துடன், ஸ்தலசயன பெருமாள் செல்ல, ஆதிவராக பெருமாள், அவரைத் தொடர்ந்து சென்று, கடற்கரையை அடைந்தனர். அவர்களின் அம்சமான, சக்காரத்தாழ்வாருக்கு, வேத பாராயண, திருமஞ்சனம் நடைபெற்றது.தொடர்ந்து, காலை, 8:50 மணிக்கு, சக்கரத்தாழ்வார்கள், கடலில் புனித நீராடினர். ஸ்ரீரங்கம், பவுண்டரீகபுரம் ஆண்டவர் சுவாமிகள், பக்தர்கள் புனித நீராடினர்.இணை ஆணையர் அசோக்குமார், செயல் அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !