பந்தலூரில் கோவில் திருவிழா
ADDED :2439 days ago
பந்தலூர்:பந்தலூர் அருகே சேரங்கோடு டான்டீ சரக பகுதியில் உள்ள, வெற்றி முனீஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு திருவிழா நடந்தது. இதில், காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
சிறப்பு பூஜைகளை கோட்ட மேலாளர் புஷ்பராணி, கள நடத்துனர்கள் பத்மசங்கர், ராஜேஸ்வரி துவங்கி வைத்தனர். மதியம் சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர், கள நடத்துனர்கள், உதவி கள நடத்துனர்கள், கள மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.