உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

நாமக்கல்: தை அமாவாசையை முன்னிட்டு, ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. நாமக்கல் அடுத்த ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தை அமாவசையன்று திருவிழா நடக்கும்.

இந்தாண்டு விழா, கடந்த, 2ல் துவங்கியது. நேற்று பிப்., 4ல், கணபதி பூஜை, கோமாதா பூஜை, மாங்கல்யதாரணம், திருமஞ்சனம், சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, மகரஜோதி அழைப்பு மற்றும் பூஜைகள் நடந்தன. வீரக்குமாரர்கள் கத்திப்போட்டவாறு வலம் வந்தனர். லிங்க பைரவி மற்றும் சாமுண்டி கோலாட்டக் குழுவினரின் கோலாட்டம், மாயா சிலம்பு பவுண்டேஷன் சார்பில், சிலம்பாட்டம் நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (பிப்., 5ல்) காலை, 10:30 மணிக்கு, வசந்த உற்சவம் என்னும் மஞ்சள் நீர் விழாவை, சென்னை போலீஸ் ஐ.ஜி., ஜெயராம் துவக்கி வைக்கிறார். விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வீரக்குமாரர்கள் நடைபயணமாக கோவிலுக்கு வந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !