உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓ.கே., வேண்டாம்; ஓம் சொல்லலாமே! காமாட்சிபுரி ஆதீனம் பேச்சு

ஓ.கே., வேண்டாம்; ஓம் சொல்லலாமே! காமாட்சிபுரி ஆதீனம் பேச்சு

பல்லடம்:பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், நேற்று (பிப்., 4ல்), தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, மஹா மிருத்யுஞ்ஜய யாகத்தை நடத்தி ஆசியுரை வழங்கினார்.அவர் பேசியதாவது:எழுந்து, உட்காரும்போது, சிவ சிவ என்று கூற வேண்டும் ஆனால், சிலர், ஐயோ என்று கூறி, தங்களின் ஆயுளை குறைத்து கொள்கின்றனர்.

அதேபோல், எதற்கெடுத்தாலும் ஓ.கே., என்று கூறுவதை தவிர்த்துவிட்டு ஓம்காரத்தை உச்சரியுங்கள். யாருக்கு எப்படி முடியுமே அந்த வகையில் கடவுளை வழிபட்டாலே போதுமானது.கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளை, முதலாளி - தொழிலாளி என, யாரும் யாரையும் ஏமாற்றுவது தர்மமாகாது. பண்பாடு, கலாச்சாரம், கலை, நூல்கள் என, உலகிலேயே அதிக சிறப்புகளை கொண்டது நம் பாரத தேசம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !