உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 36 அடி உயர வராகியம்மனுக்கு பாலாபிஷேகம்

36 அடி உயர வராகியம்மனுக்கு பாலாபிஷேகம்

மயிலம்: விழுப்புரம் மாவட்டம்  பேரணி அடுத்த செண்டியம்பாக்கம் வராகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 36 அடி உயரமுள்ள அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.

மயிலம் அடுத்த செண்டியம்பாக்கம் வராகியம்மன் கோவிலில் பாலாபிஷேகம் நடந்தது. செண்டியம்பாக்கம் அங்காளம்மன், பொன்னியம்மன், வராகியம்மன் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு 101 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை வழிபாடு, மகா தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !