சிதம்பரம் கோவிலுக்கு சுற்றுலா பணிகள் வருகை
ADDED :2543 days ago
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று (பிப்., 5ல்) ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
இந்தியாவிற்கும் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் உள்ள கோவில் களுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள கலைகள் மற்றும் அரிய தகவல்களை சேகரித்து செல்கின்றனர். அரிய தகவல்களும், சிற்பக் கலைகளையும் உள்ளடக்கிய சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கடந்த சில தினங்களாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
ஜெர்மனி, இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நடராஜர் கோவிலில் நேற்று (பிப்., 5ல்) சாமி தரிசனம் செய்தனர்.சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வழிகாட்டிகள் கோவிலின் சிறப்பு அம்சங்கள், புனிதம், ராஜ கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம் உட்பிரகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்கள் குறித்து விளக்கினர்.