உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோவில் திருவிழா பிரச்னை: விரைவில் ஆர்.டி.ஓ., உத்தரவு

சேலம் கோவில் திருவிழா பிரச்னை: விரைவில் ஆர்.டி.ஓ., உத்தரவு

சேலம்: கோவில் திருவிழா பிரச்னையில், இறுதி விசாரணை முடிந்து, இரண்டொரு நாட்களில், சேலம் ஆர்.டி.ஓ., உத்தரவிடவுள்ளார்.

சேலம், ஜாரி கொண்டலாம்பட்டியில், சர்வசக்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் முனியப்பன் கோவில் திருவிழா தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. பரம்பரை தர்மகர்த்தா சவுந்தரராஜன், ஊர்மக்கள், வழக்கம்போல் பங்குனியில் திருவிழா நடத்த வலியுறுத்தினர். பட்டு வியாபாரி நரசிம்மன் உள்ளிட்ட சிலர், சித்திரையில் நடத்த நெருக்கடி கொடுத்தனர். இதுகுறித்த விசாரணையில், திருவிழா நாட்களை வெகுவாக குறைத்து,
வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது, கட்டளைதாரர்கள் இடையே, மோதல் போக்கை ஏற்படுத்தியது.

இதனால், ஆர்.டி.ஓ.,வுக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு, நேற்று (பிப்., 5ல்), இறுதி விசாரணை நடந்தது. அதில், சவுந்தரராஜன், நரசிம்மன் ஆஜராகி, தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இரண்டொரு நாளில், உத்தரவு பிறப்பிக்கப்படும் என, ஆர்.டி.ஓ., செழியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !