ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய பக்தர்கள்
ADDED :2446 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரஷ்யா, உக்ரைன் பக்தர்கள் புனித நீராடி, தரிசனம் செய்தனர்.ரஷ்யா, உக்ரைன் சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பின் 50 பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் நீராடினர்.பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, பஜனை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.