உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படூர் வேம்புலி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

படூர் வேம்புலி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

படூர்: படூர் வேம்புலி அம்மன் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த, படூரில், 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாக, வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, கிராமத்தினர் கூடி, பல லட்சம் ரூபாயில், திருப்பணிகள் முடித்தனர். இதையடுத்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்தது. பிரதான அம்மன் விமான கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !