நாகூரில் கந்தூரி விழா கொடியேற்றம்
ADDED :2445 days ago
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர், ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 462வது ஆண்டு கந்துாரி விழா,கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும், 15ம் தேதி இரவு நாகையில் இருந்து, சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 16 அதிகாலையில் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது.இதை முன்னிட்டு, நேற்று நண்பகல், 12:00 மணிக்கு, நாகை மீரா பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலம், மேளதாளத்துடன், மங்கள வாத்தியங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் புறப்பட்டு, நாகையில், 40 வீதிகள், நாகூரில், 14 வீதிகளில் வலம் வந்து, இரவு தர்கா அலங்கார வாசலை அடைந்தது.பின், ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், தர்கா ஆதினங்கள் முன்னிலையில் தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டதும், தர்கா பரம்பரை கலிபா, துவாஓதிய, பின் கொடியேற்றும் வைபவம் நடந்தது.