உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

பென்னாகரம்: பெரும்பாலை அருகே உள்ள, ஆலாமரத்தூரில், ஓங்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தை மாதத்தில், சாணாரப்பட்டி, சோளிக்கவுண்டனூர், பூதநாயக்கன்பட்டி உள்ளிட்ட, ஐந்து கிராம மக்கள், தீ மிதி திருவிழாவை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த விழாவில், ஐந்து ஊர் மக்கள் ஒன்றிணைந்து, ரோணிப்பட்டி நாகாவதி ஆற்றில் இருந்து, சக்தி கரகம் அழைத்து, ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து நடந்த குண்டம் விழாவில், கோவில் பூசாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். விவசாயம் செழிக்க, குண்டத்தில் உப்பை கொட்டி விவசாயிகள் வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !