கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச தினம்
ADDED :2439 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வாசவி அம்மன் அக்னி பிரவேச தினம் கொண்டாடப்பட்டது. சங்கராபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் அக்னி பிரவேச தினத்தை முன்னிட்டு கணபதி பூஜை, யாக வேள்வி பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 102 கோத்திரங்களுக்கு மகா யாகவேள்வி பூஜை நடந்தது. முன்னதாக அம்மன் அக்கினி பிரவேசம் செய்து பூக்குழியில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.