2,000 ஆண்டு கல் சிலை கண்டெடுப்பு
ADDED :2435 days ago
சோளிங்கர்: பழமையான கல் சிலை, கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், சோளிங்கர் அடுத்த, நீலகண்டராயபேட்டையை சேர்ந்தவர் சிவசண்முகம், 60; விவசாயி. இவருடைய விவசாய நிலத்தில், கிணற்றில் தண்ணீர் இல்லாததால் துார் வாரும் பணி ஒரு வாரமாக நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு துார் வாரும் போது, இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சோளிங்கர் வருவாய்த்துறையினர் நேற்று சிலைகளை ஆய்வு செய்தனர். அதில், 2,000 ஆண்டுக்கு முந்தைய பழமையான அம்மன் கல் சிலைகள் என, தெரியவந்தது. வேலுார் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் சிலைகளை ஆய்வு செய்து வருகிறார்.