உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!

திருத்தணி :திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை 6.30 மணிக்கு மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 7 மணிக்கு உற்சவ பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கேடய வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 9.30 மணிக்கு வெள்ளி சூர்ய பிரபை, இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும் உற்சவ பெருமான் மலைக்கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 8ம் தேதி வரை சிம்மம், ஆட்டுக் கிடாய், பல்லக்கு சேவை, வெள்ளிநாகம், அன்னம், வெள்ளி மயில், புலி, யானை, வெள்ளித் தேர், யாளி, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் உற்சவ பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் காலை, இரவு என இரு வேளைகளில் மலைக்கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச் 5ம் தேதி நள்ளிரவு வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் தனபால் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !