உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்

தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பட்டாச்சாரியார் மான் புலிவனம். சுந்தரம் தலைமையில் பிப்., 8 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. முதல் நாள் காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, மாலை 4:00 மணிக்கு வாஸ்து ப்ரீத்தி, அங்குரபூஜை நடந்தது. மறுநாள் காலை 6:00 மணிக்கு நித்ய அனுஷ்டான நித்யோற் சவம், பிரவேச பலி சமஷ்டி நடந்தன. நேற்று (பிப்., 10ல்) காலை 4:30 மணிக்கு கோ, பரி பூஜையுடன் துவங்கியது. காலை10:00 மணிக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

சிவ, சிவ கோஷம் முழங்கிய பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலப்பேட்டை உறவின்முறை தலைவர் முருகன், உபதலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவஸ்தான கமிட்டி செயலாளர் ராமர் பாண்டியன், இணைச்செயலாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ்வரன், நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன், நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் உறவின் முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாணம்:  கோயில் மைய மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மாலை 5:30 மணிக்கு நடந்தது. பங்கேற்ற பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணிக்கு மேல் காளை வாகனத்தில் சுவாமி, அம்பாள் நகர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை தேவஸ்தான கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !