உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி ஆதியோகி சிலைக்கு சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி ஆதியோகி சிலைக்கு சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வந்த ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலைக்கு பக்தர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். ஈஷா யோக மையம் சார்பில், ஆதியோகியின் பெருமை மற்றும் யோகா அறிவியலை மக்களிடம் எடுத்து செல்லவும், வரும் மார்ச் 4-ம்தேதி
நடக்கும் மகா சிவராத்திரியை நினைவூட்டும் வகையில், இந்த ரத யாத்திரை கோவை ஈஷா யோகா மையத்திலிருந்து துவங்கப்பட்டது.

யோகாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஆதியோகியின் சிலை கொண்ட இந்த ரத யாத்திரை நேற்று (பிப்., 10ல்) மாலை 4:00 மணிக்கு கள்ளக்குறிச்சி வந்தடைந்தது. கள்ளக்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட ஆதியோகி சிலைக்கு மந்தை வெளியில் கூடியிருந்த பக்தர்கள் கயிலை வாத்தியம் முழங்க சிறப்பு, வழிபாடு செய்து, வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !