உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமி கோவிலில் குரு பூஜை

புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமி கோவிலில் குரு பூஜை

புதுச்சேரி: கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் 19ம் ஆண்டு குருபூஜை இன்று (பிப்., 11ல்) நடக்கிறது.

புதுச்சேரி திலசை, வீமகவுண்டன்பாளையம், கோரிமேடு சாலையில் அமைந்துள்ள சித்தர் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் 19ம் ஆண்டு குரு பூஜை விழா மற்றும் அன்னமளிப்பு விழா இன்று 11ம் தேதி காலை 6.45க்கு திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்குகிறது.

தொடர்ந்து காலை 9:05க்கு புனிதநீர் வழிபாடு, ஐங்கரன் வழிபாடு நடக்கிறது. 9:15க்கு சுவாமிக்கு தமிழில் வேள்வி வழிபாட்டை தொடர்ந்து பேரொளி வழிபாடு நடக்கிறது. 10.15 மணிக்கு அப்பா பைத்திய சுவாமிகளுக்கு சிறப்பு பெருந்திரு மஞ்சனம் மற்றும் திருக்குட நன்னீராட்டு, மதியம் 12:05க்கு மலர் போற்றி, பேரொளி வழிபாடு, 12:30 மணிக்கு அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !