உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி திட்டமலை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

கோபி திட்டமலை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

கோபிசெட்டிபாளையம்: நம்பியூர் அருகே திட்டமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 10ல்) கோலாகலமாக நடந்தது.

நம்பியூர் அருகே திட்டமலையில், பிரசித்தி பெற்ற, சுப்பிரமண்யசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா, கடந்த, 5ல், கோபூஜை மற்றும் தன பூஜையுடன்
துவங்கியது. பிப்.,6ல், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. பிப்.,8ல், விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று முன்தினம் (பிப்., 9ல்), மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நேற்று(பிப்., 10ல்)  காலை நடந்தது. நேற்று (பிப்., 10ல்) காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாஜ பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடந்தது. பின் கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் கோலாகலமாக நேற்று (பிப்., 10ல்)  நடந்தது.

பின் காலை, 10:00 மணிக்கு, தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. இந்த விழாவில், நம்பியூர், கெட்டிசெவியூர், கோசணம், மலையப்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கும்பாபிஷேக விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !