சிவகிரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2498 days ago
கொடுமுடி: சிவகிரி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (பிப்., 10ல்) நடந்தது.
கொடுமுடி வட்டாரம், சிவகிரி ஜீவா தெரு பகுதியில் கற்பக விநாயகர், வேம்பரசு விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஐயப்பன் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில் திருப்பணி நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா நேற்று (பிப்., 10ல்) காலை, 8:30 மணிக்கு, நடந்தது. இதையொட்டி, யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் உட்பிரகார வலம் கொண்டு செல்லப்பட்டு, பின், கோபுர விமானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.