உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் அருகே விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டன்பட்டி, சீரங்ககவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கடந்த, 8ல், கிராம சாந்தி பூஜையுடன் துவங்கிய விழாவில், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. 9ல், இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று (பிப்., 10ல்) காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. 8:30 மணிக்கு விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் உள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டது.

பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என, சரண கோஷமிட்டனர். விழா குழு சார்பில் பொதுமக்களின் மேல், புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !