மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி திருவிழா ஏற்பாடு
ADDED :2434 days ago
மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் மாசி பெருவிழா வரும், 13ல் துவங்குகிறது. வரும், 17ல் கொடியேற்றம் நடக்கிறது.
18ல், சின்ன தேர் வீதி உலா, 19ல், பெரிய தேர் வீதி உலா, 20ல் தேர் நிலை அடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 21ல் சத்தாபரணம், 23ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினர்
செய்கின்றனர்.