உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜர் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் துவக்கம்

தியாகராஜர் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் துவக்கம்

திருவொற்றியூர்: தியா­க­ராஜ சுவாமி கோவில், மாசி பிரம்­மோற்­சவ பெரு­விழா, கொடி­யேற்­றத்­து­டன்  துவங்­கி­யது. திரு­வொற்­றி­யூர், தியா­க­ராஜ சுவாமி – வடி­வு­டை­யம்­மன் கோவில், பிர­சித்தி பெற்­றது. இங்கு, ஆண்­டு­தோ­றும், மாசி பிரம்­மோற்­சவ பெரு­விழா, விம­ரி­சை­யாக கொண்­டா­டப்­படும்.
இவ்­வாண்டு, மாசி பிரம்­மோற்­ச­வம், நேற்று முன்­தி­னம் கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது.

அலங்­க­ரிக்­கப்­பட்ட பல்­லக்­கில் எழுந்­த­ரு­ளிய தியா­க­ரா­ஜர், கோவில் உள் பிர­கா­ரத்தை சுற்றி, கொடி­ம­ரம் அருகே வந்து, காட்­சி­ய­ளித்­தார். அதை தொடர்ந்து, கொடி­யேற்­றம் நடந்­தது. அப்­போது பக்­தர்­கள், ‘தியா­க­ராயா... நமச்­சி­வாயா’ என, முழங்­கி­னர். பின், தியா­க­ரா­ஜர் மாட­வீதி உற்­ச­வம் நடை­பெற்­றது. மாசி பிரம்­மோற்­சவ நாட்­களில், உற்­ச­வ­ரான சந்­தி­ர­சே­க­ரர், சூரிய பிரபை, சந்­திர பிரபை, பூதம், சிம்­மம், நாகம், ரிஷ­பம், அதி­கார நந்தி, அஸ்­த­மா­ன­கிரி விமா­னம், யானை, புஷ்ப பல்­லக்கு, குதிரை, இந்­திர வாக­னம் உள்­ளிட்ட  வாக­னங்­களில் எழுந்­த­ருளி, மாட­வீதி உலா வரு­வார். விழா­வின் முக்­கிய நிகழ்­வான தேரோட்­டம், 16ம் தேதி­யும்; திருக்­கல்­யா­ணம், 18ம் தேதி­யும்  நடை­பெ­றும்.  பிப்., 19ல், கட­லாடு தீர்த்­த­வாரி உற்­ச­வம், இரவு, கொடி­யி­றக்­கம்; 20ல், தியா­க­ராஜ சுவாமி பந்­தம்­பறி உற்­ச­வம், 18 திரு­ந­ட­னம் நிகழ்­வு­டன், விழா நிறை­வு­றும். இந்­நி­கழ்­வு­களில் பங்­கேற்க, சென்னை மட்­டு­மின்றி, பிற பகு­தி­களில் இருந்­தும், ஏரா­ள­மான பக்­தர்­கள் வரு­வர் என்­ப­தால், விரி­வான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !