உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழை முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

ஏழை முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

புதுச்சேரி: திருவண்டார்கோவில் ஏழைமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவண்டார்கோவிலில் உள்ள ஏழைமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 10 ம் தேதி காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜைகளும், புதிய சுவாமி சிலைகள் கரிகோல ஊர்வலம் நடந்தது.  மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, மூலமந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால பூஜையும், மூலமந்திர ஹோமமும், காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 9:30 மணிக்கு மூலவர் விமான கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு செல்வ விநாயகர், பாலமுருகன், துர்கை, தட்சணாமூர்த்தி மற்றும் ஏழை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்கள் சுகுமாறன், கோபிகா, மணக்குள விநாயகர் கல்வி குழும செயலர் டாக்டர் நாராயணசாமிகேசவன் உட்பட பலர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் பாலு, செயலர் இளையராஜா, பொருளாளர் வீரப்பன், துணை தலைவர் ரமஷே் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !