ராஜ மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2544 days ago
திருப்பூர்: மங்கலத்தில், ராஜ மகாகணபதி கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.திருப்பூர், மங்கலம், சைலாந் தோட்டத்தில் உள்ள ராஜமகாகணபதி கோவிலில், ராஜமகா கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி சன்னதி மற்றும் விமானங்களுக்கு வர்ணம் புதுப்பித்து, திருப்பணி நிறைவுற்றது.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஸ்ரீ ராஜ மகா கணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, அவிநாசி ஜெயசுப்புராம சிவாச்சார்யார், ஆகம விதிகள்படி, கும்பாபிஷேகம் செய்தார்.அபிராமி அந்தாதி இணை பாராயணம், வள்ளி கும்மியாட்டம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.