பேரீஞ்சம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் புனரமைப்பு ஏப்ரலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :2433 days ago
பேரீஞ்சம்பாக்கம்:பேரீஞ்சம்பாக்கத்தில், சிதிலமடைந்து காணப்பட்ட, அகத்தீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில், பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து காணப்பட்டது.
இதுகுறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், அப்பகுதி கிராம மக்கள் இணைந்து கோவிலை புதுப்பித்து கட்டி வருகின்றனர்.இது குறித்து, கிராம மக்கள் கூறுகையில், ஆறு மாதங்களுக்கு முன், திருப்பணியை துவங்கினோம். தற்போது, 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அடுத்த இரண்டு மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுஉள்ளோம் என்றனர்.