விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா துவங்கியது
ADDED :5044 days ago
விருத்தாசலம் :விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவில் மாசிமக திருவிழா நேற்று (27ம் தேதி) துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி நேற்று பகல் 12.15 மணிக்கு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஐந்து கொடி மரங்களிலும் வாண வேடிக்கை, மங்கள இசை முழங்க கொடியேற்றப்பட்டது. முன்னதாக விநாயகர், விருத்தகிரீஸ்வரர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய ”வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் 3ம் தேதி விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 6ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. 7ம் தேதி மாசி மக திருவிழா நடக்கிறது.