இளையான்குடி அய்யனார் கோவில் அருகே கும்பாபிஷேக விழா
ADDED :2429 days ago
இளையான்குடி:இளையான்குடி அருகே திருவள்ளூர் அழகியவரத அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 8ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், உட்பட பல யாக பூஜைகள், ஹோமங்கள் செய்யப்பட்டது. நேற்று (பிப்., 11ல்) காலை 10.30 மணிக்கு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அன்ன தானமும் நடைபெற்றது.