திருக்காஞ்சியில் 19ம் தேதி தீர்த்தவாரி
வில்லியனூர்: ஒதியம்பட்டு காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் தேவஸ்தானம் மாசி மக தீர்த்தவாரி விழா வரும் 19ம் தேதி நடக்கிறது.
வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடந்த 10ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனை தொடர்ந்து நடைபெறும் விழாவில் வருகிற 17ம் தேதி மாலை 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.முக்கிய விழாவான தீர்த்தவாரி வரும் 19-ந் தேதி
காலை 7.30 மணிக்கு சங்கராபரணி நதிக்கரை வடபுறத்தில் சுவாமி அதிகார நந்தி காமாட்சியுடன் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் வில்லியனூர், அரும்பார்த்தபுரம், முத்திரையர்பாளையம், கூடப்பாக்கம், சேந்தநத்தம், வி.மணவெளி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.விழா
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் ஒதியம்பட்டு கிராம மக்கள் செய்து வருகின்றனர்.