தேவதானப்பட்டியில் மாசி மகா சிவராத்திரி விழா: முகூர்த்தக்கால் நடல்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவுக்காக நேற்று (பிப்., 12ல்) முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றங் கரையில் அமைந்துள்ளது.இங்கு மூலஸ்தானம் திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை செய்யப்படுகிறது.24 மணி நேரமும் அணையாத நெய்விளக்கு எரிகிறது. இந்தாண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 4ல் துவங்கி மார்ச் 8 ல் முடிகிறது.
இதற்காக அம்மன் பக்தையான காமாக்காள் நினைவு தினமான நேற்று (பிப்., 12ல்) சிரார்த்தம் செய்யப்பட்டு அதன் பிறகு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தேனி, பெரியகுளம், கொடைக்கானல் பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை செயல்
அலுவலர் சந்திரசேகரன், பரம்பரை நிர்வாக அறங்காவலர் தனராஜ்பாண்டியன், பரம்பரை அறங்காவலர் கனகராஜ்பாண்டியன் ஆகியோர் செய்தனர்.