வால்பாறை கோவிலில் வித்தியார்த்தி ஹோமம்
ADDED :2429 days ago
வால்பாறை:வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள், சிறப்பாக தேர்வு எழுத, வால்பாறை
சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 17ம் தேதி வித்தியார்த்தி ஹோமம் நடக்கிறது.கல்வி பயிலும் மாணவர்கள், சிறந்த ஞானம் பெற்று சிறப்பான முறையில் தேர்வு எழுதும் வகையில், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது.
பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளலாம். வரும், 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையில் மாணவர்கள்
பெற்றோர்களுடன் கலந்து கொள்ளலாம், என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.