உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று (பிப்., 13ல்) மாசி மகத்தேர்த் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.

காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (பிப்., 13ல்) காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது.

வருகிற 16ம் தேதி வரை இரவில் அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் ஆகிய வாகனங்களில் அரங்கநாதப் பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது.

வரும் 17ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 18ல், திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும், 19ம் தேதி காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப்பெருமாள் தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிற்பகல், 2:45 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 20ல் பரிவேட்டையும், 21ல் தெப்பத்திருவிழா, 22ல் சந்தான சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !