உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூரில் நாகமாதா கோவில் பொங்கல் விழா

சூலூரில் நாகமாதா கோவில் பொங்கல் விழா

சூலூர்:சூலூரில் உள்ள ஸ்ரீசக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, நேற்று (பிப்., 12ல்) மாலை, வாஸ்து பூஜையுடன், 14வது கும்பாபிஷேக விழா மற்றும் பொங்கல் விழா
துவங்கியது. இன்று (பிப்., 13ல்) காலை கொடியேற்றமும், பூதபலி, அத்தாழ பூஜை நடக்கின்றன.
தினமும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன. வரும், 17ம் தேதி பொங்கல் விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !