மைக்கேல்பாளையம் பஞ்., மலைக்கருப்புச்சாமி கோவில் சாலை சரிசெய்யப்படுமா?
ADDED :2431 days ago
அந்தியூர்: மைக்கேல்பாளையம் பஞ்., மலைக்கருப்புச்சாமி கோவில் பகுதியில் இருந்து, ஈசப்பாறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையோரம் குழி பறிக்கப்பட்டது. நீண்ட நாட்களாகியும், எந்த பணியும் நடக்காமல்
உள்ளது. ஈசப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, மலைக்கருப்புச்சாமி கோவிலுக்கு வாகனங்களில் வருவோர் மற்றும் நடந்து செல்வோரும் தொடர்ந்து சிரமப்பட்டு
வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, இப்பகுதி, சாலைப் பணியை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.