விழுப்புரம் செல்லியம்மன் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
விழுப்புரம்: விழுப்புரம் கமலா நகரில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 10:00 மணிக்கு அம்மன் சிறப்பு ஊஞ்சல் உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு பரிகார ஹோமம், மதியம் 2:04 மணிக்கு ராகு பகவான் கடகம் ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி நடைபெற்றதையொட்டி நவக்கிரக சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, காலசர்பம், பூர்வு புண்ணிய தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.
செஞ்சிசெஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று (பிப்., 13ல்) பகல் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 1:25 மணிக்கு ராகு, கேதுவுக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலன் பெறும் ராசிதாரர்கள் அர்ச்சனையும், பரிகார ராசி தாரர்கள் பரிகார பூஜையும் செய்து வழிபட்டனர்.
கண்டாச்சிபுரம்ராம நாதீஸ்வரர் கோவிலில் நேற்று (பிப்., 13ல்) மதியம் ராகு கேது சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
அவலூர்பேட்டைஅகத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று (பிப்., 13ல்) 12:00 மணிக்கு மகா யாகமும் தொடர்ந்து மகா தீபாரதனையும் நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். இதே போன்று மன்னார்சாமி சமேத பச்சையம்மாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தன.