உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாஜாபேட்டை ராகு, கேது பெயர்ச்சி யாகம்

வாலாஜாபேட்டை ராகு, கேது பெயர்ச்சி யாகம்

வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று (பிப்., 13ல்) காலை, 10:00 மணி முதல், 12:00 வரை, ராகு, கேது யாகம் நடந்தது. உத்தரமேரூர் சதாசிவ பிரம்மேந்திர ஆசிரம தலைவர் மாதாஜி அன்னபூரணி அம்மாள், முரளிதர சுவாமிகள் தலைமையில் யாகம் நடந்தது. தொடர்ந்து, கூட்டு பிரார்த்தனை நடந்தது. யாகத்தில் பங்கேற்றவர்களுக்கு, திருமண தடை, வேலை கிடைக்க தடை, அயல் நாட்டு பயணம் தடை, குழந்தை தடை விலகும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், என முரளிதர சுவாமிகள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !