உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் பிரம்மோற்சவம்: ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

திருவொற்றியூர் பிரம்மோற்சவம்: ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

திருவொற்றியூர்: மாசி பிரம்மோற்சவத்தின், நான்காம் நாள் இரவு திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் உற்சவரான சந்திரசேகரர்,  ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா, 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், பிப்., 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் நான்காம் நாளில் உற்சவரான சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !