ஆதியோகி ரதத்திற்கு பக்தர்கள் வரவேற்பு
ADDED :2509 days ago
திண்டிவனம்: திண்டினவம் வந்த ஆதியோகி ரதத்திற்கு, பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர்.ஈஷா யோக மையம் சார்பில், கோவையில் இருந்து துவங்கிய ஆதியோகி ரதம் பொதுமக்கள் தரிசனத்திற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. திண்டிவனத்தில் உள்ள திந்திரணீஸ்வரர் கோவிலுக்கு வந்த ரதத்திற்கு, சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து துவங்கிய ரதத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் வெங்கடேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.