பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2754 days ago
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருத்தேரில் வைத்து கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.