உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி, பகவதி கோவில் கும்பாபிஷேகம்

ஊட்டி, பகவதி கோவில் கும்பாபிஷேகம்

ஊட்டி அடுத்துள்ள காந்தளில், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் தெருவில், அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள், கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப் பட்டு கோபுரங்கள் பொலிவுப்படுத்தப்பட்டன.

கும்பாபிஷேக விழாவை ஒட்டி, நேற்று (பிப்., 14ல்) கணபதி வழிபாடு, மகா கணபதி ஹோமம், தீபாராதனை வழிபாடு, விளக்கு பூஜை நடந்தது. இன்று (பிப்., 15ல்), ஹோமம், திருவிளக்கு பூஜை, பிரதிஷ்டை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (பிப்., 16ல்), காலை, 7:30 மணிக்கு முதல், 8:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !