உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம்

கடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம்

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், அக்கிள் நாயுடு தெருவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நேற்று செடல் மற்றும் தேர் உற்சவம் நடந்தது.இதை முன்னிட்டு, கடந்த 6 ம் தேதி காலை விக்னஷே்வர் பூஜை, மாலை சக்தி கொண்டு வருதல் நடந்தது. தொடர்ந்து தினந்தோறும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று காலை 9ம் நாள் உற்சவத்தில் காலை சக்தி கரகம் கொண்டு வந்தனர். பகல் 12:00 மணிக்கு செடல் போடுதல் நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடந்தது. இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை தலைவர் திருஞானசேகர், செயலர் ராஜி, துணைத் தலைவர் கமலநாதன், துணை செயலர் சத்தியமூர்த்தி, மணிவண்ணன், கணேச குருக்கள், ஸ்ரீதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !