உலக நலனுக்காக பழநியில் லட்சார்ச்சனை, ருத்ரயாகம்
ADDED :2590 days ago
பழநி: பழநி சங்கராலயம் சார்பில், உலக நலன்வேண்டி லலிதா, சிவா லட்சார்ச்சனை, மகா ருத்ரயாகம் பிப்.,13 முதல் 19 வரை நடக்கிறது. பழநி அடிவாரம் சங்கராலயம் மடத்தில் 52வது மகாருத்ர யாகத்தை முன்னிட்டு, கும்பகலசங்களில் புனித கங்கா தீர்த்தம் வைத்து மகாருத்ரயாகம் ஒருவாரம் நடக்கிறது. நேற்று வாஸ்து ஜெபம், திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகம் செய்து, மகாகணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 50க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் மூலம் தொடர்ந்து சூக்த ஹோமம், லலிதா லட்சார்ச்சனை, சுதர்சன ஹோமம், துர்க்கா சூக்த ஹோமம், விஷ்ணுசகஸ்ர நாமஜெபம், ருத்ர அபிஷேகம், சிவா லட்சார்ச்சனை என ருத்ர ஜெபமும், யாகபூஜைகளும் நடக்கிறது, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை மகா ருத்ர யக்ஞ கமிட்டி, சங்கராலயம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.