திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் அறங்காவலர் பணிக்கு விருப்பமா?
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில் அறங்காவலராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசு உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் செய்யப்பட உள்ளது.
இணை கமிஷனர், உதவி கமிஷனர், கோவில் இன்ஸ்பெக்டர் அலுவலகங்களில், அதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 28ம் தேதிக்குள், இணை கமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கோர்ட் தண்டனை பெற்றவர்கள், திவால் நோட்டீஸ் கொடுத்தவர்கள், மற்றொரு கோவிலில் நிர்வாகி அல்லது நிர்வாகக்குழுவால், நீக்கப்பட்டவர்கள், அறநிலைய நலனுக்கு விரோதமாக இருப்பவர்கள், கோவில் கட்டளை அறங்காவலர்கள், அரசு பதவி, மக்கள் பிரதிநியாக இருந்து நீக்கப்பட்டவர் உள்ளிட்டோர், அறங்காவலராக இயலாது. தகுதியான நபர்கள், அறங்காவலராக பணியாற்ற, 28ம் தேதிக்குள், இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.