பண்ருட்டி அருகே கோவில் குளம் ஆக்கிரமிப்பு சிவனடியார்கள் சிறப்பு பூஜை
ADDED :2455 days ago
பண்ருட்டி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தி, பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்தனர்.திட்டக்குடி வைத்தியநாத சுவாமி திருக்கோவில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தியும், தெப்பல் திருவிழா நடத்த வலியுறுத்தியும், திட்டக்குடியை சேர்ந்த சிவனடியார்கள், நேற்று (பிப்., 15ல்) பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு குளத்தில் 108 குடம் தண்ணீர் பிடித்து, மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோரிக்கைகள் நிறைவேற சிறப்பு பூஜை செய்தனர். தண்ணீர் பஞ்சம் தீர அப்பர்,சுந்தரர், ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தின் 30 பாடல்கள் பாடி சிறப்பு ஆராதனை செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.