உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கலில் தசாவதார அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்

திண்டுக்கலில் தசாவதார அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் தசாவதார கோலத்தில் அம்மன் காட்சியளித்தார்.ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஜன.31 ல் பூத்தமலர் பூ அலங்காரம், பிப்.1 ல் பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சாட்டுதல் விழா, பிப்.5 ம் தேதி கொடியேற்றம் நடந்தது.

அதன் பின், பிப்.8 ல் அம்மன் நாகல் நகர் புறப்பாடு, பிப்.15 பூக்குழி இறங்கும் விழா நடந்தது.நேற்று முன்தினம் (பிப்., 16ல்) தசாவதாரம் விழாவையொட்டி அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள்நடந்தது. இரவில் அம்மன் காளி, கூர்ம, மச்ச, கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி உள்ளிட்ட அவதாரங்களில் காட்சியளித்தார். ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர்.விடிய விடிய தசாவதார விழா நடந்ததால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று (பிப்., 17ல்) மஞ்சள் நீராட்டுதல், மாலையில் கொடியிறக்கம் நடந்தது. இன்று (பிப்., 18ல்) இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது. நாளை (பிப்., 19ல்) மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !