உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செக்கானூரணி அருகே வாலகுருநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செக்கானூரணி அருகே வாலகுருநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செக்கானூரணி : செக்கானூரணி அருகே சொக்கநாதபுரம் அங்காளஈஸ்வரி வாலகுருநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்., 15 காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.

வேதபாராயணம், தீபாராதனை நடந்தது. பிப்.,16 இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை 4:45 மணிக்கு நான்காம் காலயாகசாலை பூஜைகள் முடிந்து புனிதநீர் அடங்கிய கலச புறப்பாடு நடந்தது. காலை 7:20 மணிக்கு கோயில் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிவானந்த பட்டர் குழுவினர் கும்பாபிஷேகம் நடத்தினர்.

சோழவந்தான் மேலநாச்சிகுளம் ஆவுடைபேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மணிசிவம் பட்டர் தலைமையில் பிப்.,16 கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று (பிப்., 17ல்) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின் சிவாச்சார்யார்கள் புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !