உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் கோவில் குளத்தில் வெளிநாட்டினர் வழிபாடு

மாமல்லபுரம் கோவில் குளத்தில் வெளிநாட்டினர் வழிபாடு

மாமல்லபுரம்:வெளிநாட்டுப் பயணியர், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், தீர்த்தக் குளக்கரையில், வழிபாடு நடத்தினர்.ஆன்மிக கலாச்சார பாரம்பரியத்துடன் விளங்கும், நம் நாட்டு, ஹிந்து மத வழிபாடு பாரம்பரியம், உலக நாட்டினரை ஈர்க்கிறது.குறிப்பாக, நம் நாட்டின் யோகா, தியானம் உள்ளிட்ட மனம், உடல் சார்ந்த முறைகள், அவர்களை கவர்கிறது.

அதனால், நம் ஆன்மிக கலாச்சார பாரம்பரியத்தை அறிய முற்பட்டு, பின்பற்றவும் விரும்புகின்றனர்.சைவ, வைணவ சமயங்களை, விருப்பத்திற்கேற்ப அறிந்து, இந்திய கோவில்களில் வழிபடுகின்றனர்.இந்நிலையில், கனடா நாட்டு, எழுத்தாளரும், ஆன்மிகவாதியுமான, ஆன்ட்ரிவ் ஹார்வி என்பவர், அந்நாட்டு மற்றும் பிற நாட்டு சீடர்களுடன், மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளார்.இவ்வூர், ஸ்தலசயன பெருமாள் கோவில், தீர்த்தக் குளக்கரையில், நேற்று (பிப்., 17ல்), ஹோமம் வளர்த்து, வழிபாடு செய்தார். அவர்களுக்கு அர்ச்சகர்கள், ஹோமத்தின் பலன் குறித்து விளக்கினர்.வேத மந்திரங்கள் முழங்கி, பயணியருக்கு வழிநடத்த, அவர்கள் பின்பற்றி, வேள்வித் தீயை வலம் வந்து வணங்கி, சங்கல்பம் செய்து, மெய்சிலிர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !