உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ரதோற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ரதோற்சவம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான ரதோற்சவம் நடந்தது.இக்கோவிலில்,ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம், நடைபெறும். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவம், பிப்.,10ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், காலை, மாலையில், அம்மன் பல்வேறு வாகனங்களில், எழுந்தருளி உலா வந்தார்.ஏழாம் நாளில், ரதோற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட எடுப்பு தேரில் எழுந்தருளிய அம்மன், நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார். இரவு, வெள்ளி ரதம் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !