உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெற்கு நோக்கிய ராஜகோபுரங்கள் உள்ள அனைத்துமே பரிகாரத்திற்காக ஏற்பட்டவை என்று ஜோதிடர் ஒருவர் கூறுகிறார்? விளக்கம் தரவும்.

தெற்கு நோக்கிய ராஜகோபுரங்கள் உள்ள அனைத்துமே பரிகாரத்திற்காக ஏற்பட்டவை என்று ஜோதிடர் ஒருவர் கூறுகிறார்? விளக்கம் தரவும்.

பரிகாரம் என்று எதை குறிப்பிடுகிறார்? இப்போது இவ்வளவு பிரபலம் அடைந்திருக்கும் பரிகாரங்களையும் வாஸ்துக்களையும் பெரிய திருக்கோயில்கள் எழுப்பப்பட்ட காலங்களில் யாரும் சட்டை செய்ததாகத் தெரிய வில்லையே? நவக்கிரக தலங்கள் போன்ற பரிகாரத்தலங்களில் தெற்கு பார்த்த கோபுரமே கிடையாது. இதற்கு என்ன பதில் சொல்வீர்கள். அரசர்களும், குருமார்களும்,சிற்பிகளும் சாஸ்திரங்களை முற்றும் உணர்ந்த மகான்கள் ஆவர். அவர்களுக்கு இறைவன் காட்டிய நெறி நின்று அமைக்கப்பட்டவையே நமது திருக்கோயில்கள். எல்லா கோயில்களுமே மிகப்புனிதமானவையும் நமது கஷ்டங்களுக்குப் பரிகாரம் அளிப்பதும் ஆகும். சிலர் குழப்புவதற்கென்றே உட்கார்ந்து யோசிப்பாங்களோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !