பழையஜெயங்கொண்டத்தில், குண்டம் இறங்கிய பாதயாத்திரை பக்தர்கள்
ADDED :2463 days ago
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காலையில், மாரியம்மன் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. பின் சுவாமிக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலையில் கோவில் முன், அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு, பக்தர்கள் அதில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் அவர்கள் பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.