உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூரில் ஆதியோகி ரத ஊர்வலம்

குன்னூரில் ஆதியோகி ரத ஊர்வலம்

குன்னூர்: மகா சிவராத்திரியையொட்டி குன்னூரில் ஆதியோகி ரத ஊர்வலம் நடந்தது.கோவை ஈஷா மையத்தில் மார்ச் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது.

இதனையொட்டி, ஆதியோகி ரத ஊர்வலம் நேற்று (பிப்., 17ல்) குன்னூருக்கு வந்தது.குன்னூர் எடப்பள்ளி சாய்பாபா கோவிலில் காலை 8:00 மணிக்கு துவங்கிய ஊர்வலம், பெட்டட்டி, இளித்தொரை, எடப்பள்ளி, வண்டிச்சோலை வழியாக சிம்ஸ்பார்க்கிற்கு காலை 10:45 மணிக்கு வந்தடைந்தது.

தொடர்ந்து பெட்போர்டு, சிம்ஸ்பார்க், பஸ் ஸ்டாண்ட் வி.பி., தெருவில் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். ஓட்டுப்பட்டறை, மவுன்ட் பிளசன்ட், வெலிங்டன், பாய்ஸ்கம்பெனி, சின்ன உபதலை, பெரிய உபதலை, ஓதனட்டி, ஜெகதளா, காரக்கொரை, அருவங்காடு எல்லநள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து கூடலூரில் ரத ஊர்வலம் நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை ஈஷா யோகா மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !